என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » மகிமா நம்பியார்
நீங்கள் தேடியது "மகிமா நம்பியார்"
கொல்லிமலையில் உள்ள ஆகாய கங்கையில் மிகுந்த சிரமங்களுக்கிடையே முதல் முறையாக பிரபுதேவா நடிக்கும் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்துள்ளது.
கொல்லிமலைப் பகுதியில் அதிகம் இதுவரை சினிமா படப்பிடிப்புகள் நடந்ததில்லை. அதிலும் குறிப்பாக கொல்லிமலையின் சிறப்புமிக்க, பிரசித்தி பெற்ற இடம் என்றால் அது ஆகாய கங்கை என்கிற 1500 அடி உயரமுள்ள அருவியாகும்.
சாதாரணமாக சுற்றுலாப்பயணிகள் செல்வதற்கே மிகவும் சிரமப்பட்டுத் தான் இந்த அருவிக்கரையை அடைய முடியும். மலையிலிருந்து எங்கிருந்து பார்த்தாலும் இந்த அருவி கண்களுக்குப் புலப்படாது. மிக ரகசியமாக 1250 செங்குத்தான படிகளில் வலிகளை பொருட்படுத்தாமல் இறங்கினால் மாத்திரமே கடைசிப் படி இறங்கி திரும்பினால் அருவி முழுத் தோற்றம் கண்களுக்குத் தெரியும் வகையில் இயற்கையாகவே அமைந்துள்ள ரகசிய பிரமாண்டமாகும் இந்த ஆகாய கங்கை அருவி.
இந்த ஆகாய கங்கையில் முதல்முறையாக எம்.எஸ்.மூவிஸ் கே.முருகன் தயாரிப்பில், பா.விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு முறையான அனுமதி பெற்று நடந்துள்ளது. ஆகாயகங்கை அருவிக்கரைக்கு செல்வதற்கு படப்பிடிப்பு குழுவினர் அதிகாலை சுமார் 5 மணியில் இருந்தே டோலி மூலமும் உள்ளூர் மக்கள் உதவிகளைப் பெற்றும் நடிகர், நடிகைகள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கீழே இறங்க ஆரம்பித்து, பல கற்பாறைகள், மழை, காற்று இவற்றையெல்லாம் சமாளித்து தொழில்நுட்ப கருவிகளை மிகவும் சிரமப்பட்டு சுமந்துகொண்டு அருவிக்கரையை பதினொரு மணிக்கு அடைந்துள்ளனர். அதன் பிறகு ஏராளமான வலிகளையும் சிரமங்களையும் தாங்கி முதல்முறையாக ஆகாயகங்கை பகுதியில் பிரபுதேவா, மகிமா நம்பியார் உட்பட பல நடிகர்கள் மிகவும் சிரமப்பட்டு நடித்துள்ளனர்.
‘ஈட்டி’ படத்தை அடுத்து ரவி அரசு இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஐயங்கரன்’ படக்குழுவினரின் முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
காமன்மேன் பிரசன்ஸ் பி.கணேஷ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘ஐங்கரன்’. ‘ஈட்டி’ திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ரவி அரசு இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். மகிமா நம்பியார் கதாநாயகியாக நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷே இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ஜி.வி.பிரகாஷின் வழக்கமான படங்களிலிருந்து வேறொரு ஸ்டைலில் உருவாகி இருக்கும் இப்படத்தின் டீசரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் சமீபத்தில் வெளியிட்டார். வெளியான சில நேரங்களில் சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வைரலானது. ரசிகர்கள், திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலர் இந்த டீசரை பார்த்து வெகுவாக இயக்குனரை பாராட்டினார்கள்.
தற்போது படத்தின் பணிகள் அனைத்தையும் முடித்து தணிக்கை குழுவினருக்கு அனுப்பியுள்ளனர். படத்தை பார்த்த அதிகாரிகள் ‘யு’ சான்றிதழ் வழங்கி படக்குழுவினரை பாராட்டியுள்ளனர். தணிக்கையில் ‘யு’ சான்றிதழ் பெற்றது படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
திரையுலகினரிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் ‘ஐங்கரன்’ திரைப்படத்தை வெகு விரைவில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
சாட்டை படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி தற்போது ஒரு சில படங்களில் நடித்து வரும் மகிமா நம்பியார் ஒரு படத்தில் குத்துப்பாட்டுக்கு நல்ல ஆடணும் என்பதே தனது கனவு என்று கூறியுள்ளார். #MahimaNambiar
மகிமா நடிப்பில் சமீபத்தில் வெளியான அண்ணனுக்கு ஜே அவருக்கு நல்ல பெயரை பெற்று தந்துள்ளது.
விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக அசுரகுரு மற்றும் ஜீ.வி.பிரகாஷ் ஜோடியாக ஐங்கரன் மற்றும் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் உருவாகும் கிட்னா படங்களில் நடித்துக் கொண்டே கல்லூரிக்கும் சென்று வருகிறார்.
மகிமா அளித்த பேட்டியில் இருந்து, ‘இப்போ எம்.ஏ இங்கிலீஷ் படிச்சுட்டு இருக்கேன். நடிக்கிறதைத் தவிர எனக்கு டான்ஸ் பிடிக்கும். முறைப்படி கிளாசிக்கல் டான்ஸ் பயிற்சி எடுத்திருக்கேன். ஆனா, இதுவரை எனக்கு நல்லா டான்ஸ் பண்றதுக்கான வாய்ப்பு சினிமாவில் கிடைக்கவில்லை. ஒரு படத்துலயாவது ஹை எனர்ஜியுடன் குத்து பாட்டுக்கு டான்ஸ் ஆடணும்னு ரொம்ப ஆசை’ என்று தனது ஆசையை வெளிப்படுத்தி இருக்கிறார். #MahimaNambiar
வெற்றிமாறன் தயாரிப்பில் தினேஷ், மகிமா நம்பியார் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘அண்ணனுக்கு ஜே’ படத்தின் முன்னோட்டம். #AnnanukkuJai #Dinesh #MahimaNambiar
`அட்டகத்தி' படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் தினேஷ். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான `உள்குத்து' படத்திற்கு ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்த நிலையில், தினேஷ் நடிப்பில் அடுத்ததாக `அண்ணனுக்கு ஜே' என்ற படம் உருவாகி இருக்கிறது.
ராஜ்குமார் இயக்கியிருக்கும் இந்த படத்தில் தினேஷ் அரசியல்வாதியாக நடித்திருக்கிறார். இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் வருகிற ஆகஸ்ட் 31-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக படக்குழுவினர் சமீபத்தில் அறிவித்தனர்.
அரசியல் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கும் இதில் தினேஷ் ஜோடியாக மகிமா நம்பியாரும், முக்கிய கதாபாத்திரங்களில் ராதாரவி, ஆர்.ஜே.பாலாஜி, மயில்சாமி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி சார்பில் இயக்குநர் வெற்றிமாறன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அரோல் கொரேலி இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவு பணிகளை விஷ்ணு ரங்கசாமி கவனித்திருக்கிறார். #AnnanukkuJai #Dinesh #MahimaNambiar
அண்ணனுக்கு ஜே, ஐங்கரன் ஆகிய படங்களில் நடித்து வரும் மகிமா நம்பியா, எனக்கு இப்போது காதலர் இல்லை என்று கூறியுள்ளார். #Mahima
சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளிவந்த சாட்டை படம் மூலம் அறிமுகமானவர் மகிமா நம்பியார். இப்படத்திற்குப் பிறகு ‘குற்றம் 23’, ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ என தொடர்ந்து படங்களில் நடித்து வரும் அவர் அடுத்து விக்ரம் பிரபுவுடன் ‘அசுரகுரு’, தினேசுடன் ‘அண்ணனுக்கு ஜே’, ஜி.வி.பிரகாசுடன் ‘ஐங்கரன்’ படங்களில் நடிக்கிறார்.
இதுவரை எந்த கிசுகிசுவிலும் சிக்காத ரகசியத்தை கேட்டபோது ‘நல்ல விஷயம் தானே... நான் ரொம்ப நல்ல பொண்ணு. படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு போய்விட்டால் நான் உண்டு, என் வேலை உண்டுன்னு இருப்பேன். அது போல நான் காதல் எதுவும் பண்ணலை. காதல் பண்றது தப்பு கிடையாது. ஆனால் இப்போதைக்கு எனக்கு ஆள் இல்லை. அதனால் தான் என்னைப்பற்றி கிசுகிசு ஏதும் வரவில்லை.
எம்.ஏ. ஆங்கில இலக்கியம் படிக்கிறேன். அடுத்து எம்.பில்., பி.எச்டி, நெட் தேர்வுன்னு பிளான் பண்ணிருக்கேன். நடிப்பு ஒரு பக்கம் இருந்தாலும், படிப்பு தான் எதிர்காலத்துக்கு மிகவும் முக்கியம்’ என்று கூறினார்.
ராஜ்குமார் இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் அண்ணனுக்கு ஜே படத்தில் மகிமா நம்பியார் மேக்கப் இல்லாமல் தர லோக்கல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். #AnnanukkuJai #MahimaNambiar
இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் அட்டகத்தி தினேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் அண்ணனுக்கு ஜே. அரசியல் கலந்த த்ரில்லர் படமாக உருவாகி உள்ள இந்த படத்தின் டிரைய்லர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் ராஜ்குமார், “இப்படத்திற்குப் பக்கபலமாக இருந்த வெற்றிமாறனுக்கு நன்றி. நடிகர் தினேசுக்கு முழுக்கதையை சொல்லாமலேயே நடிக்க வைத்தேன். மகிமா மேக்கப் கூட போடாமல் நடித்திருந்தார்.
மயில்சாமி மற்றும் வையாபுரி இருவரும் எப்போதும் நகைச்சுவை நடிகர்களாகப் பல படங்களில் நடித்து இருப்பார்கள். இந்தப் படத்தில் சீரியஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்” என்று கூறினார். மகிமா நம்பியார் பேசும்போது, தான் டப்பிங் பேசி நடித்ததைக் குறிப்பிட்டார். “வெற்றிமாறன் போன்ற பெரிய இயக்குனரின் தயாரிப்பு நிறுவனத்தில் நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
இந்தப் படத்தில் ‘தர லோக்கல்’ கதாபாத்திரத்தில் மேக்கப் இல்லாமல் நடித்துள்ளேன்” என்று கூறினார். உள்ளூர் அரசியலை பேசி இருக்கிறோம். இந்த கதையை 4 ஆண்டுகளுக்கு முன்பு ராஜ்குமார் கூறினார். ஆனால் இன்றுவரை அந்த கதை புதிதாகவே இருக்கிறது. காரணம் யாரும் அதிகம் தொடாத அரசியல் களம்’ என்றார்.
அரோல் கரோலி இசை அமைக்க விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார். ஜி.பி.வெங்கடேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார். #AnnanukkuJai #MahimaNambiar
“அண்ணனுக்கு ஜே” படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் தினேஷ், நான் ரஜினி-கமலை ஆதரிக்க மாட்டேன். தினகரனை ஆதரிப்பேன் என்று கூறினார். #AnnanukkuJai #Dinesh
இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் ‘அட்டகத்தி’ தினேஷ் நடித்துள்ள படம் “அண்ணனுக்கு ஜே”.
அரசியலை மையப்படுத்தி உருவாகி உள்ள இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அப்போது ‘அட்டகத்தி’ தினேஷ் அளித்த பேட்டி வருமாறு:-
இது தனிப்பட்ட நபர் யாரையும் குறிக்கும் கதை அல்ல. எனக்காக எழுதப்பட்ட கதை. பொதுவான ஒரு அரசியல் கட்சி பற்றிய கதை. நான் மட்டை சேகர் என்ற பெயரில் ஒரு ஏழைத் தகப்பனின் மகனாக வருகிறேன்.
அரசியலே தெரியாமல் காதலித்துக் கொண்டு வெட்டியாக சுற்றிக்கொண்டிருக்கும் ஒருவன், ஒரு துரோகத்திற்கு பிறகு அரசியலுக்குள் நுழைந்து அரசியல்வாதியாகிறான் என்பதே படம். படத்தில் ஒரு தேசிய கட்சி, மாநில கட்சி இரண்டுக்குமான போட்டியாக இருக்கும்.
சின்ன வயது முதலே எனக்கு அரசியல் ஆசை இருக்கிறது. அரசியலுக்கு வரும் எண்ணமும் உண்டு. அதற்கு அனுபவம் வேண்டும்.
நியாயமான கோரிக்கைக்காக போராடினால் துப்பாக்கியால் சுடுகிறார்கள். அந்த ஆதங்கம் தான் அரசியலில் இறங்க காரணம். இங்கே வழிகாட்ட சரியான தலைவர் இல்லை. கேள்வி கேட்க கூட மறுக்கிறார்கள்.
நான் ரஜினி-கமலை ஆதரிக்க மாட்டேன். தினகரனை ஆதரிப்பேன். இப்போது அவர் நன்றாக செயல்படுகிறார். பொதுமக்களில் ஒருவனாக கூறுகிறேன். அவர் பேசுவது எனக்கு பிடிக்கும். எல்லாவற்றையும் நேர்த்தியாக அணுகுகிறார்.
“நீட்” தேர்வுக்காக லயோலா கல்லூரியில் நடந்த கூட்டத்தில் பேசினேன். பேசிக்கொண்டே தான் இருக்கிறோம். அடுத்த கட்டத்துக்கு செல்வதில்லை. ரஞ்சித் எடுக்கும் முயற்சிகள் நல்ல நோக்கத்தோடு இருக்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார். #AnnanukkuJai #Dinesh
ராஜ்குமார் இயக்கத்தில் தினேஷ் - மகிமா நம்பியார் நடிப்பில் உருவாகி இருக்கும் `அண்ணனுக்கு ஜே' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. #AnnanukkuJai #Dinesh
`அட்டகத்தி' படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகர் தினேஷ். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான `உள்குத்து' படத்திற்கு ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்த நிலையில், தினேஷ் நடிப்பில் அடுத்ததாக `அண்ணனுக்கு ஜே' என்ற படம் உருவாகி இருக்கிறது.
ராஜ்குமார் இயக்கியிருக்கும் இந்த படத்தில் தினேஷ் அரசியல்வாதியாக நடித்திருக்கிறார். இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் வருகிற ஆகஸ்ட் 17-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. அரசியல் கலந்த காமெடி படமாக உருவாகி இருக்கும் இதில் தினேஷ் ஜோடியாக மகிமா நம்பியாரும், முக்கிய கதாபாத்திரங்களில் ராதாரவி, ஆர்.ஜே.பாலாஜி, மயில்சாமி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
Right....Right..🙂👍 https://t.co/RQpMZlW3zh
— Dinesh (@Dineshvcravi) July 10, 2018
கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி சார்பில் இயக்குநர் வெற்றிமாறன் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அரோல் கொரேலி இசையமைத்திருக்கிறார். ஒளிப்பதிவு பணிகளை விஷ்ணு ரங்கசாமி கவனித்திருக்கிறார். விரைவில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.
தினேஷ் தற்போது `களவாணி மாப்பிள்ளை', `பல்லு படாம பாத்துக்கோ' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். #AnnanukkuJai #Dinesh #MahimaNambiar
சாட்டை, குற்றம் 23, கொடி வீரன் ஆகிய படங்களில் நடித்த மகிமா, தற்போது எந்த படப்பிடிப்பிலும் நடிக்காமல் தேர்வில் கவனம் செலுத்தி வருகிறார். #Mahima
சாட்டை மூலம் அறிமுகமான மகிமாவுக்கு இப்போது தொடர்ந்து நடிக்கும் வாய்ப்புகள் வருகின்றன. விக்ரம் பிரபு, ஜிவி.பிரகாஷ் இருவருக்கும் ஜோடியாக ஒவ்வொரு படத்திலும் நடித்துவருகிறார்.
மகிமா நாளை தொடங்கும் இரண்டாம் ஆண்டு எம்.ஏ. ஆங்கில இலக்கியத் தேர்வை எழுத உள்ளார். இதற்காக ஒரு மாத காலத்துக்கு எந்தப் படப்பிடிப்பும் இல்லாதவாறு கால்ஷீட்டை மாற்றிக் கொண்டிருக்கிறார்.
இரண்டாம் ஆண்டு தேர்வு என்பதால் முழு கவனத்துடன் எழுதி ‘எம்.ஏ’ பட்டம் பெற்றுவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். தேர்வு முடிந்ததும் மம்மூட்டி நடிப்பில் உருவாக உள்ள புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாக உள்ளார்.
அட்டக்கத்தி படம் மூலம் பிரபலமான தினேஷ் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் ‘அண்ணனுக்கு ஜே’ திரைப்படம் ஆகஸ்ட் 17ம் தேதி வெளியாக இருக்கிறது. #Dinesh #AnnanukkuJai
அட்டக்கத்தி படம் மூலம் பிரபலமானவர் நடிகர் தினேஷ். இப்படத்தை தொடர்ந்து ‘குக்கூ’, ‘திருடன் போலீஸ்’, ‘விசாரணை’, ‘ஒரு நாள் கூத்து’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது இவரது நடிப்பில் ‘அண்ணனுக்கு ஜே’ என்ற திரைப்படம் உருவாகியுள்ளது.
இதில் தினேஷுக்கு ஜோடியாக மகிமா நம்பியார் நடித்துள்ளார். மேலும் ராதா ரவி, மயில்சாமி, வையாபுரி போன்றோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். அரோல் கொரேலி இசையமைத்துள்ள இப்படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி ராஜ்குமார் இயக்கி இருக்கிறார். இவர் வெற்றி மாறனிடம் உதவி இயக்குனராக பணி புரிந்தவர்.
தற்கால அரசியலை நையாண்டி செய்யும் இப்படத்தை இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் வெற்றி மாறனின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனியும் 20 சென்சுரி பாக்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறது. இந்நிலையில், இப்படத்தை ஆகஸ்டு 17ம் தேதி வெளியிட இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X